அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து  திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபப்புரை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எப்படியாவது இந்த அரவை கவிழ்த்துவிடு ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார். ஆனால் அது ஒரு காலும் நடக்காது என அமைச்சர் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தா ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என கொந்தளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருக்கிறார்கள்  என்றும், அவர் கண் அசைத்தால் திமுகவே காணாமல் போகும் என்றும் தெரிவித்தார்.