தமிழகத்தைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் சித்தாந்த அரசியலை எதிர்த்து வரும கனிமொழி, ஆ,ராசா, திருமாவளவன் மற்றும் காங்கிரசில் இருந்தபடியே இந்து தத்துவார்த்த அரசியல் எதிர்ப்பாளரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

இந்த நான்கு பேரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த  எடப்பாடியிடம் பாஜக அசைன்மெண்ட் கொடுத்திருந்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்கள் முன்பு எடப்பாடியைத் தொடர்பு கொண்ட பாஜக மேலிடம் இத்திட்டம் குறித்து நினைவு படுத்தியுள்ளது. 

ஆனால் மத்திய அமைச்சர்கள் 8 வழிச்சாலை மற்றும் நீட் தேர்வு குறித்து பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் நமது கூட்டணிக்கு பின்னடைவைத் தந்துள்ளது எனக் கூறி சமாளித்திருக்கிறார்.

ஆனாலும் இது தொடர்பாக எடப்பாடியை பாஜக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிறுகிறுத்துப் போன முதலமைச்சர் என்ன செய்வதென்று கையைப் பிசைந்திருக்கிறார்.

எது எப்படியோ மே 23 ஆம் தேதி இந்த நான்கு பேரில் யார் யார் ? வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தெரியவரும்.