தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த 22ம் தேதி முதல் பள்ளி ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 17 பி பிரிவின் கீழ் ஆசிரியர்கள் பணிக்கு வராதது குறித்து விளக்கம் அளிக்க அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்களை நியமக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.7500 ஊதியத்தை பெற்றோர் ஆசிரியர்கழகம் சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்று வருகின்றனர். இதனால் குறைந்தபட்சம் 4 லட்சம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.