#BREAKING: விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? அவருக்கு சொந்தமான 3 சூட்கேஸ்கள் கண்டெடுப்பு!

 காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

3 suitcases found at Vetri Duraisamy missing place tvk

இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும்  பணியில் கடற்கடை ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்துள்ளன. 

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). சினிமா துறையிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி தனது நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக இன்னோவா காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். 

இதையும் படிங்க: ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!

3 suitcases found at Vetri Duraisamy missing place tvk

கார் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், கார் சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து  200 அடி சறுக்கி சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ED RAID : செந்தில் பாலாஜி வீட்டிற்க்குள் புகுந்த அமலாக்கத்துறை.. மீண்டும் ED ரெய்டால் அதிர்ச்சியில் திமுக

3 suitcases found at Vetri Duraisamy missing place tvk

இந்நிலையில், சட்லஜ் நதியில் மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் கடற்கடை ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவருக்கு சொந்தமான 3 சூட்கேஸ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உடைகள் சிக்கிய இடத்துக்கு அருகே வெற்றியை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios