Asianet News TamilAsianet News Tamil

கபடி போட்டியின்போது உயிரிழந்த சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கடலூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

3 lakhs financial assistance for kabaddi player family.. mk stalin announcement
Author
Cuddalore, First Published Jul 27, 2022, 5:51 PM IST

கடலூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கபடி வீரர் விமல்ராஜ் (22). இவர் சேலம் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக போட்டி நடந்த மைதானத்தில் விமல்ராஜ் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், கபடி போட்டியின்போது உயிரிழந்த வீரர் சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட சாவுக்கு மாமியார்தான் காரணம்.. 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!

3 lakhs financial assistance for kabaddi player family.. mk stalin announcement

இது தொடர்பான முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தே மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

3 lakhs financial assistance for kabaddi player family.. mk stalin announcement

உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த திரு.சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  கடலூரில் களத்திலேயே உயிரை விட்ட கபடி வீரர்.! கண்களை குளமாக்கும், பதைபதைக்க வைக்கும் காட்சி.. வைரல் வீடியோ

Follow Us:
Download App:
  • android
  • ios