Asianet News TamilAsianet News Tamil

வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப் போனவங்க 28 பேர்… அதிர்ச்சிப் பட்டியலை வெளியிட்ட வெளியுறவுத்துறை…

வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப் போனவங்க  28 பேர்… அதிர்ச்சிப் பட்டியலை வெளியிட்ட வெளியுறவுத்துறை…

28 people got load in banks and escape from india
Author
fraud in bank, First Published Aug 11, 2018, 1:17 PM IST

பொருளாதாரக் குற்றவாளி களான இந்த 28 பேரையும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள், மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம்மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக வும் வெளியுறவுத்துறை தெரி வித்துள்ளது.

வங்கிகளில் கடனாக வாங்கியகோடிக்கணக்கான ரூபாயை முறையாக திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

28 people got load in banks and escape from india

இந்த மசோதாவின் படி, வங்கிகளில் ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினாலோ அல்லது விசாரணைக்காக நாடு திரும்ப மறுத்தாலோ அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பின்னர், அவர்களுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மனுசிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களை பண மோசடி சட்டத்தின்படி தலைமறைவு பொருளாதார குற்ற வாளியாக அறிவித்து அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

28 people got load in banks and escape from india

குறிப்பாக, தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அடுத்த2 ஆண்டுக்குள் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.இந்நிலையில், நிதிமோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகளின் பெயர்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது பட்டிய லிட்டுள்ளது.

அதில், விஜய் மல்லையா, நீரவ் மோடி மட்டுமன்றி, “புஷ்பேஷ்பெய்ட், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, சுனய் கல்ரா, சஞ்சய் கல்ரா, சுதிர்குமார் கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கமலேஷ் பரேக், நிலேஷ் பரேக், எகல்வியா கார்க், வினய் மிட்டல், சேட்டன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேட்டன் குமார் சந்தேசரா, நிஷால் மோடி,மெகுல் சோக்ஸி, சப்யா சேத், ராஜிவ் கோயல், அல்கா கோயல்,லலித் மோடி, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் நரேந்திரபாய் படேல், மயூரிபென் படேல், பிரீத்தி ஆஷிஷ்ஜோபன்புத்ரா” ஆகியோர் நிதிமோசடி செய்து விட்டு, வெளிநாடு களுக்கு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios