Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு 25 சீட்: உறுதியானது தொகுதிப்பட்டியல்... மதிமுக, விசிக.,வுக்கு எத்தனை சீட் தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் 24 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. ஏற்கெனவே காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

25 seats for DMK
Author
Tamil Nadu, First Published Feb 23, 2019, 1:04 PM IST

மக்களவைத் தேர்தலில் 24 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. ஏற்கெனவே காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 25 seats for DMK

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக என மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இழுபறியாகி வந்தன. விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கி கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டது.  ஆனால், மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியினருக்கு தொகுதிகளை ஒதுக்கி கூட்டணியை உறுதி செய்யாமல் வருகிறது திமுக.

 25 seats for DMK

திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப்பங்கீட்டுக்குழு இந்தக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மு.க.ஸ்டாலின், மற்றும் காதர் மொய்தீன் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் மதிமுக, 3 சீட்டுக்களையும், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் தலா 2 சீட்டுகளையும் கேட்டு வந்தன. 25 seats for DMK

ஆனால், இந்த கட்சிகளுக்கு தலா ஒரு சீட் மட்டுமே ஒதுக்குவதில் உறுதியாக இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டை திமுக அறிவிக்க உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios