Asianet News TamilAsianet News Tamil

நேபாள சுற்றுலா பயணிகள் உட்பட் ஒரே நாளில் நடந்த விபத்தில் 25பேர் பலியான சம்பவம் ..!!

ஒரே நாளில் 25க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தழிழகத்தையும்,நேபாளத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
 

25 Nepalese tourists killed in accident overnight
Author
Tamil Nadu, First Published Feb 20, 2020, 8:03 AM IST

T.Balamurukan

ஒரே நாளில் 25க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தழிழகத்தையும்,நேபாளத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

25 Nepalese tourists killed in accident overnight

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.  
இந்த விபத்தில், 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த விபத்து நடந்தது சிறிது நேரத்திலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து , இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது போலீஸ். விபத்திற்கான காரணத்தையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்,போலீஸ் கமிசனர்,தீயணைப்பு வீரர்கள் என விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து முதலுதவி போன்றவற்றை செய்தனர்.

25 Nepalese tourists killed in accident overnight

 ஓமலூர் அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நரி பள்ளம் என்ற இடத்தில் நேபாள நாட்டு சுற்றுலா பஸ், கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்ததது. அந்த பஸ், நரி பள்ளம் அருகே வந்தபோது ஆம்னி பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.அவர்களது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 பேர், பலத்த காயமடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

20-க்கும் மேற்பட்ட பயணிகள்  படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் பலியானவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios