தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்கள் உறுதி.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அண்ணாமலை ஆவேசம்

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக தற்போது அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று கோவை வந்தார்.

25 MPs confirmed from Tamil Nadu says bjp annamalai

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மாநில அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், முழுமையாக கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி வளர்ந்திருக்கிறதா என்று கேட்டால் உண்மையாக இல்லை என்று நான் கூறுவேன்.

25 MPs confirmed from Tamil Nadu says bjp annamalai

நீலகிரியில் இன்றைக்கும் கூடலூரில் இருந்து ஆத்திர அவசரத்திற்கு ஒரு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் ஒரு மருத்துவமனை இல்லை.  இதனை அறிந்த பிரதமர் மோடி அனுமதி வழங்கிய 11 புதிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று நீலகிரிக்கு வழங்கியுள்ளார். கோவைக்கு இஎஸ்ஐ மருத்துவமனையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

இந்தத் தொகுதிகளில் பாஜகவுக்கு எம்பிக்கள் இல்லை என்றாலும்கூட, இந்த 8 ஆண்டுகளில், பிரதமர் மோடி கோவை, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  பிரதமரும், மத்திய அரசும் என்னதான் கொடுத்தாலும், அதை சரியாக கொண்டுவந்து இங்கு மக்களிடம் கொடுப்பதற்கு, ஒரு மக்கள் சேவகன் தேவைப்படுகிறான். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, திமுக, காங்கிரஸ் கட்சிகள்போடும் கோஷம்.

25 MPs confirmed from Tamil Nadu says bjp annamalai

கொங்கு பகுதியில் திமுக எதை எடுத்து செல்லலாம் என நினைக்கிறது. எதை கொடுக்கலாம் என பாஜக நினைக்கிறது. இந்த முறை பாஜக சார்பில் 25 எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம். வெட்கமும், மானமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான். சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன் ?

திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு குழப்பமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். திமுக, எப்போதுமே தமிழுக்கும், தாழ் நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்பட்டு வந்துள்ளது. ஜே.பி நட்டாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும் என்று பேசினார்.

இதையும் படிங்க.. AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios