குஜராத்தைச்  சேர்ந்த ஹாசன் சபீன் என்ற 22 வயது இளைஞர் இந்தியாவின் இளம் வயது ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார் குஜராத் மாநிலம்   பாலன்புரின் கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறு வயது முதலே ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்றார் லட்சியத்துடன் இருந்து வந்துள்ளார் இவரது பெற்றோர்கள் வைர நகை தொழிலாளர்களாக வேலை செய்து தங்களது குடும்பத்தை கவனித்து வந்ததுடன் மகனின் ஐபிஎஸ் கனவை நினைவாக்க போராடி வந்துள்ளனர்.

 

ஆனால் அவர்களுடைய வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததால் சபீன் ஐபிஎஸ் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுவந்தார்.  இதனால் மகனுக்கு உதவி செய்ய முடிவு செய்த அவரது தாய்  வீட்டிற்கு அருகில்  சப்பாத்தி கடை வைத்து அதன் மூலம் கிடைத்த  வருமானத்தை மகனின் படிப்பு செலவுக்கு வழங்கி வந்துள்ளார் .  சபீன் நல்ல முறையில் படித்து வருவதை கண்ட அப்பகுதியிலுள்ள தொழிலதிபர்கள் சபீன் படிக்க உதவி செய்துள்ளனர் .  இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 570 வது ரேங்க் பெற்று சபீன் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார் .  இந்நிலையில்  டிசம்பர் 23 ஆம் தேதி ஜாம்நகர் போலீஸ் துணை சூப்பிரண்டாக அவர்  பொறுப்பேற்க உள்ளார். 

இதன் மூலம் இந்தியாவின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை சபீன் பெற்றுள்ளார் ,  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சபீன் தனக்கு கிடைத்த வெற்றியை தான் மட்டும் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை ,  ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் ஒத்துழைப்பு தந்த எனது பெற்றோர்களுக்கு  இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் முதல் முறையாக நான் தேர்வு எழுத சென்றபோது விபத்தில் சிக்கினேன் ஆனாலும் விடாமுயற்சியுடன் தேர்வு எழுதினேன்.  ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனால்  விடாமுயற்சியுடன் இருந்து  இரண்டாவது முறை தேர்வெழுதி  ஐபிஎஸ் அதிகாரியாகி உள்ளேன் என தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.