Asianet News TamilAsianet News Tamil

மோதிப்பார்க்க தயாரான அதிமுக... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் அடங்கிய குழுவை ஓபிஎஸ் மற்றும் ஈவிஎஸ் அறிவித்துள்ளனர்.

2019 parliamentary election... AIADMK system group
Author
Tamil Nadu, First Published Jan 23, 2019, 11:11 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் அடங்கிய குழுவை ஓபிஎஸ் மற்றும் ஈவிஎஸ் அறிவித்துள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அதிமுக சார்பில் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 2019 parliamentary election... AIADMK system group
 
அதில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., செய்திதொடர்பாளர் கே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்று உள்ளனர்.2019 parliamentary election... AIADMK system group

அதேபோல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2019 parliamentary election... AIADMK system group

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படுத்த தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகை செல்வன், வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios