ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 139 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ணர். இந்நிலையில், பலரும் காரணமின்றி ஊர் சுற்றுவது தொடர்கிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு கைது செய்கின்றனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1.94 லட்சம் வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.89 லட்சத்து 23 ஆயிரத்து 644 லட்சம் அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 139 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.