ஊனமுற்றோர் என்றாலே அறுவருப்பாக பார்க்கும் அந்த இளைஞனால் அவன் பணி செய்த ஊனமுற்றோர்களுக்கான முதியோர் இல்லத்தில் வேலை செய்ய அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. இதன்காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டான்.அவர்கள் நாட்டுக்கு பாரமாக இருக்கிறார்கள் இவர்கள் உயிருடன் இருக்க கூடாது என்று சுமார் 19 ஊனமுற்ற முதியவர்களை துடிதுடிக்க கொலை செய்திருக்கிறான் அந்த இளைஞன். இப்படியொரு சம்பவம் ஜப்பான் நாட்டில் அரங்கேறியுள்ளது.


ஜப்பானில் "சுகுய் லில்லி கார்டன்" என்ற அமைப்பு அங்குள்ள உடல் ஊனமுற்றோர் முதியவர்களுக்கான இல்லத்தை நடத்தி வருகிறது. இங்கே பணி செய்தவன் தான் கொலையாளி சதோஷி உமாத்சு. 26வயதான இவன் தான் இப்படியொரு பாதகமான செயலில் ஈடுப்பட்டுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அந்த முதியோர் இல்லத்தில் 149 பேர் தங்கி இருக்கிறார்கள். இவர்களை பராமரிக்க 9பணியாளர் வேலை செய்துவருகின்றனர். திடீரென்று வேலையை ராஜினாமா செய்த சதோஷி நான்கு மாதங்களுக்கு கழித்து ஜூலை 26 ஆம் தேதி நள்ளிரவு தான் வேலை பார்த்த  முதியோர் இல்லத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்கு  கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளான்.அங்கிருந்த 19 முதியவர்களை துடிதுடிக்க கொலை செய்து உள்ளான்.

இந்த கொலை நடந்தது 2016ம் ஆண்டு ஜீலை மாதம்16ம் தேதி.நள்ளிரவு நேரத்தில் அந்த இல்லத்திற்குள் சென்றவன் 19பேரை கழுத்தறுத்து கொன்றிருக்கிறான். மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார்கள். பாதுகாப்பான நகரம் என்பதால் கொலைகாரன் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு இடத்தில் ஒழிந்திருந்துவிட்டு அடுத்த நாள் காலையில் அருகில் உள்ள சாகமிஹாரா போலீஸ் ஸ்டேசனில் சரண் அடைந்திருக்கிறான்.

அங்குள்ள அரசியல்வாதிக்கு எழுதிய கடித்தில்..'முதியவர்கள் நாட்டிற்கு பாரம். எனவே அவர்களை கருணை கொலை செய்ய உத்தரவிடுங்கள். அந்த வேலையை நானே மன மகிழ்ச்சியுடன் செய்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறான்.அதன் அடிப்படையில் போலீசார் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தியதுடன், உளவியல் சிகிச்சைக்கும் பரிந்துரைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் மார்ச் 2 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட உமாத்சு, சுமார் 146 நாட்களுக்கு பின்னர்  முதியோர் இல்லத்தில் புகுந்து இந்த  கொடூர திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

கொலைகாரனான உமாத்சுவை நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்திய போது அவன் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப்போட்டது...."தான் ஹிட்லரின் பாணியை பின்பற்றியதாக கூறிய உமாத்சு, தாம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என விசாரணையின் போது தெரிவித்துள்ளான். கடந்த ஜனவரி மாதம் நீதிமன்ற விசாரணை தொடங்கிய நிலையில், உமாத்சு மீது 19 கொலை வழக்கும் 26 கொலை முயற்சி வழக்கும் நிரூபிக்கப்பபட்டிருக்கிறது.மேலும் அவனது மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜப்பானில் உள்ள சிறை ஒன்றில் தன்னுடைய மரணத்திற்கான நாளை எண்ணிக் காத்துக்கொண்டிருக்கிறான் உமாத்சு.