Asianet News TamilAsianet News Tamil

ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த #1801_ஜம்புத்தீவுபிரகடனம் ... இந்திய அளவில் ட்ரெண்டிங்..!

 இதனையடுத்து #1801ஜம்புத்தீவு_பிரகடனம் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 
 

1801 Jambuthivu Declaration that made the English play ... Trending in India ..!
Author
Tamil Nadu, First Published Jun 16, 2021, 12:11 PM IST

1801 சூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்”என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது

 1801 Jambuthivu Declaration that made the English play ... Trending in India ..!
அதன்பின் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி, சிவகங்கை மீது 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர், இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. கடும் போருக்குபிறகு காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார், அத்துடன் சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.1801 Jambuthivu Declaration that made the English play ... Trending in India ..!

அவர்களுடன் அவர்களின் ஆண் வாரிசுகள் அனைவரும் ( "துரைச்சாமி" சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர ) தூக்கிலிடப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் இன்றைய பினாங்கு நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

 

 இதனையடுத்து #1801ஜம்புத்தீவு_பிரகடனம் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios