Asianet News TamilAsianet News Tamil

அரசியலில் திடீர் திருப்பம்..! 16 எம்எல்ஏக்கள் போர்க்கொடி..!

16 congress mla reacting against bjp in goa
16 congress mla reacting against bjp in goa
Author
First Published May 17, 2018, 4:16 PM IST


கோவா அரசியலில் திடீர் திருப்பம்

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவா சட்ட மன்ற தேர்தலில் 16 இடங்களை பிடித்தது. பாஜக 13  இடங்களை பிடித்தது

பின்னர் கூட்டனி அமைத்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதே நிலை கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்று வருவதால், இதனை எதிரொலிக்கும் விதமாக காங்கிரஸ் எல்எல்ஏக்கள்  இன்று மாலை ஆளுநர் மாளிகை முன்  அணிவகுத்து செல்ல முடிவு செய்து உள்ளனர்

அதன்படி. தாங்களே வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்க வேண்டும் என கோவாவில்  புயலை கிளப்பி உள்ளது காங்கிரஸ்  

அதாவது 15 மாதங்களுக்கு பிறகு பெரும் புயலை கிளப்பி உள்ளது தற்போது காங்கிரஸ்.

கார்நாடக மாநிலத்தை பொறுத்த வரையில், காங்கிரஸ் மற்றும் மஜாத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முன்வந்த போது ஆளுநர் காங்கிரசுக்கு அழைப்பு கொடுக்க வில்லை...

ஆனால் சென்ற ஆண்டு கோவாவில் நடைப்பெற்ற தேர்தலில் பாஜக மட்டும் கூட்டனி வைத்து ஆட்சி அமைத்து  விட்டனர்.என்ற கோணத்தில் ஒப்பிட்டு தற்போது, கர்நாடகத்தில் காங்கிரசின் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக கோவாவில்  புயலை கிளப்பி  உள்ளனர் எம்எல்ஏக்கள்

இது தொடர்பாக இவர்கள் உச்சநீதிமன்றத்தை நாட கூட உரிமை உண்டு. இந்த  செயலால் பாஜக விற்கு சற்று பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், அடுத்து  என்ன  நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை எம்எல்ஏக்கள் எடுக்கும் முடிவில் தான்  உள்ளது.  

கோவாவில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து பீகாரிலும் போர்க்கொடி தூக்கியது காங்கிரஸ் லாலுவின் கட்சி.ராஷ்டிரிய ஜனதா தளமே தனி பெரும் கட்சி என கூறி, ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆளுநர் முன் வைத்துள்ளது காங்கிரஸ்.

Follow Us:
Download App:
  • android
  • ios