நாகர்கோவில் அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் பகுதியை சேர்ந்த சிறுமி, சில தினங்களுக்கு முன்பு மாயமானார். மாணவியின் தந்தை அளித்த புகாரை அடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாயாரே அவரை தவறான பாதைக்கு அழைத்துச்சென்றது தெரியவந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் என 5 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. 

சிறுமியின் தாய், பால் என்ற 66 வயது முதியவர், ஆட்டோ ஓட்டுனர் அசோக்குமார், சிறுமியின் உறவுக்கார இளைஞன் கார்த்திக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை, நெல்லை மாவட்டம் உவரியில் வைத்து போலீசார் கைது செயதனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.