திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஏகமாக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். 

நடந்து முடிந்த தேர்தலில் திமுக 15 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்ததாகவும், அதை திரும்பப் பெறுவதற்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பாஜக துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிராமப்புறங்களில் பாஜகவை வலுப்படுத்த பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஏகமாக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவரின் குற்றச்சாட்டுகள் தொடர்கிறது. அதேபோல் முதலமைச்சரின் துபாய் பயணத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஊழல் பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் துபாய் சென்றதாகவும் அவர் கூறினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு திமுக சார்பில் 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்காட்சியின் மாநில துணைத் தலைவர் திமுகவின் முன்னாள் எம்.பியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கேபி ராமலிங்கம் திமுக தலைமையின் மீது பகிர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நடந்து முடிந்த தேர்தலில் திமுக சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது என்றும், தற்போது அந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்பதற்காகத்தான் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கிராமப்புற அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். ராஜகண்ணப்பன் மீது ஆளுநரை சந்தித்து புகார் அளித்த பின்னரே அவர் செய்த தவறுக்கு துறையை மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் விவசாய காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள், தமிழகத்தில் விவசாய காப்பீடு மட்டும் 7846 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார். முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில் கூட்டுறவுத் துறையை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது என்றும், அதிகார வெறியுடன் பாஜக செயல்படுவது என்றும் குறை கூறுகிறார்.

ஒருவரை குறை சொல்லுவதற்கு முன் தங்கள் முதுகில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தற்போது தேர்தல் முடிந்தவுடன் எதற்கு சொத்துவரி ஏற்றினார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்தலில் செலவு செய்த 15,000 கோடி ரூபாய் பணத்தை திரும்ப பெறுவதற்காகத்தான் அது உயர்த்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். அவர்கள் இந்தக் குற்றச்சாட்டு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.