திருச்சியில் மாநாடு.! இபிஎஸ் தலைமையில் ஆட்சி..! செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன தெரியுமா.?

திமுகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றினைந்து தக்க பாடம் புகட்டுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 resolutions including holding state conference in Madurai were passed in AIADMK working committee meeting

அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இரங்கள் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அதிமுக மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடத்த முடிவு, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி, நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது. அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.

ரயில் டிக்கெட் வாங்க கூட முடியாதவர் கருணாநிதி.! பல லட்சம் கோடி சொத்து வந்தது எப்படி.? எச் ராஜா கேள்வி

15 resolutions including holding state conference in Madurai were passed in AIADMK working committee meeting

திமுக அரசுக்கு கண்டனம்

அதிமுக சார்பாக பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி தராத தமிழக அரசுக்கு கண்டனம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளாகியும் நிறைவேற்றாததற்கு கண்டனம், தமிழகத்தில் தொடர் கொலை, கொள்ளை,பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை தடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம். தமிழகத்தின் கடன் சுமையை குறைக்காமல் 2.5 லட்சம் கோடி அதிகப்படுத்தியதற்கு கண்டனம். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி சுமையை மக்கள் மீது திணித்த திமுக அரசுக்கு கண்டனம். திமுகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றினைந்து தக்க பாடம் புகட்டுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 resolutions including holding state conference in Madurai were passed in AIADMK working committee meeting

மீண்டும் அதிமுக ஆட்சி

மேலும் காவேரி- கோதாவரி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை வழங்காத திமுக அரசிற்கு கண்டனம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மலர அயராது உழைத்திடுவோம் என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

பாஜக உடன் கூட்டணியா.? தனித்து போட்டியா.? செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி முக்கிய முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios