Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்..! யார் யாருக்கு எந்தெந்த துறை..?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் முதல் முறையாக 15 பேர் அமைச்சராக உள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரத்தை பார்ப்போம்.
 

15 new faces will be ministers as first time in mk stalin lead ministry
Author
Chennai, First Published May 6, 2021, 5:30 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கிறது. நாளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கிறது. 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். இவர்களில் 19 பேர் ஏற்கனவே அமைச்சர் பதவிவகித்த அனுபவம் கொண்டவர். 15 பேர் முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளனர். 

15 new faces will be ministers as first time in mk stalin lead ministry

ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதுமுகங்களின் பட்டியல்:

சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் 

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்

ஆவடி சா.மு.நாசர் - பால்வளத்துறை அமைச்சர்

செஞ்சி மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

மெய்யநாதன் - சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் 

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
 

Follow Us:
Download App:
  • android
  • ios