T.Balamurukan

வயதானாலும் தன் பாச மனைவி வலியால் துடிப்பதை பார்த்து சகிக்க முடியாமல் துடிதுடித்தார் அன்பழகன். கொரோனா ஊரடங்கு போட்டாலும் என் மனைவி மீது உள்ள பாசத்திற்கு ஊரடங்கு போடமுடியாது.என்று சொல்லி சைக்கிளில் 140கி.மீ பயணம் செய்து மனைவியை காப்பாற்றிய சம்பவன் அனைவர் மனதையும் நெகிழச் செய்திருக்கிறது.

58 வயது முதியவர் ஒருவர், நோயால் துடித்த தனது மனைவியை 140கி.மீ சைக்கிளிலேயே வைத்து கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் ஜிபமர் மருத்துவமனை டாக்டர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உடனே மருத்துவம் பார்த்து,மருந்து மாத்திரை கொடுத்ததோடு கார் ரெடி பண்ணி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

புதுச்சேரியில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு கேன்சருக்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் வயதானவர் ஒருவர் தனது மனைவியை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஜிப்மர் மருத்துவமனைக்குள் வந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலாளிகள் எங்கே.? போறிங்க அதெல்லாம் இங்கே வரக்கூடாது. போங்க... போங்க.. உடனே அந்த பெரியவர் அய்யா  கேன்சர் சிகிச்சை பிரிவுக்கு போகனும் என் பொண்டாட்டி வலியால ரெம்ப துடிக்றா.. நான் கும்பகோணத்துல இருந்து சைக்கிள்ல வந்தோம்ய்யானு சொன்னதும் அந்த காவலாளி மனசு சுக்குநூறாகி போனது. அய்யஅ கொஞ்சம் உட்காருங்க என்று சொல்லிவிட்டு விசத்தை பெரிய டாக்டர்கள் வரைக்கும் கொண்டு சென்றார் அந்த காவலாளி.அதுவரைக்கும், அந்த கட்டடத்தின் வாயிலில் சென்று சைக்கிளோடு களைப்புடன் அமர்ந்தார்கள் அந்த தம்பதிகள்.

அடுத்ததாக வந்த பாதுகாவலர்கள் அந்த முதியவரிடம் சைக்கிளை இங்கே விடக்கூடாது என்று கூறி அதற்கான இடத்தை காட்டினர். அப்போது தான் அந்த 58 வயது முதியவர் சொன்னார். எனது மனைவி கேன்சர் நோயால் அவதிப்படுகிறார். கடந்த மாத சிகிச்சைக்கு வந்தபோது இன்றைய தேதிக்கு பரிசோதனை செய்ய வரச்சொன்னார்கள். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். பேருந்து போக்குவரத்து எதுவும் இல்லை.
வாடகை காரிலோ ஆம்புலன்ஸிலோ வர கையில் பணம் இல்லை. அதனால் மனைவி மஞ்சுளாவை சைக்கிளில் அமர வைத்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து 140 கி.மீட்டர் தூரம் மிதித்து வந்தது களைப்பாக உள்ளது. சிறிது ஓய்வுக்கு பின் சைக்கிளை பார்க்கிங்கில் போடுகின்றேன் என மூச்சு வாங்க முதியவர் அறிவழகன் சொல்ல அதிர்ந்து போனார்கள் ஜிப்மர் மருத்துவமனை பாதுகாவலர்கள். 

உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டது ஜிப்மர் நிர்வாகம்.  மஞ்சுளாவை கேன்சர் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு தற்போது எடுக்க வேண்டிய மருந்துகளையும் கொடுத்தும் அனுப்பினர். மனைவிக்கு சிகிச்சை கிடைத்த மகிழ்ச்சியில் 140 கி.மீட்டர் தூரம் சைக்கிளை மிதித்து வந்த களைப்பு நீங்கி மீண்டும் 140 கி.மீ தூரம் செல்ல உற்சாகத்துடன் வெளியே வந்து சைக்கிளை பார்த்தார் அறிவழகன்.சைக்கிள் காணவில்லை.அதிர்ச்சியடைந்தார் அவர். எப்படி ஊருக்கு போவது என்று யோசித்த அறிவழகன், அருகில் இருந்த பாதுகாவலர்களிடம் அய்யா இங்கே நிறுத்திருந்த சைக்கிள்ல பாத்திங்களா.? அந்த பாதுகாவலர்கள்..,' இந்த கார்ல ஏறி உட்காருங்கள்.சைக்கிள் அதுகுள்ள இருக்கு என்றதும் மனைவியை பார்த்து புன்சிரிப்பு சிரித்தபடி வாகனத்தில் ஏறி உட்கார்ந்தார்.அய்யா '.என்கிட்ட பணம் இல்ல இப்படியே நானும் எம் பொஞ்சாதியும் சைக்கிள்ல போயிடுறோமே.' பாதுகாவலர்களும்,டிரைவரும் பணம் வேண்டாம்..உங்கள ,உங்க ஊர்லயே விட்டுறேன் வாங்கனு அழைத்து கொண்டு போய் கும்பகோணத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் கார் டிரைவர். 

  கொரோனா கற்றுத்தரும் பல்வேறு பாடத்தில் இந்த பாசப்பறவைகளின் போராட்டமும் வெற்றிபெற்றிருக்கிறது.