பாஜகவில் இணைந்த மாஜி அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறரா அண்ணாமலை.?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவிற்கு ஷாக் கொடுக்க அந்த கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேரை பாஜக தனது அணிக்கு இழுத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் 14 பேரும் பாஜகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் கூட்டணி இழுபறி
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கேற்றார் போல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் பரபரப்பாக நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. கடந்த 5 வருடமாக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் வெற்றி பெற் முடியாத நிலையே ஏற்பட்டது. இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இரண்டு கட்சி ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டது. ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அதிரடியாக வெளியேறியது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சு.?
இந்தநிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்குள் கொண்டு வர பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. இந்தநிலையில் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேரை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில் 14 பேரும் அதிமுகவில் இணைந்தனர். இதே போல திமுக முன்னாள் எம்பி ஒருவரும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்த மாஜி எம்எல்ஏக்கள்
1. திரு.கு.வடிவேல் - கரூர், 2. திரு.P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி,3. திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான், 4. திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர், 5. திரு R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர், 6. திரு.M.V.ரத்தினம் - பொள்ளாச்சி, 7. திரு S.M.வாசன் - வேடச்சந்தூர், 8. திரு.S.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி, 9. திரு.P.S. அருள் - புவனகிரி, 10. திரு.N.R.ராஜேந்திரன், 11. திரு. R.தங்கராசு - ஆண்டிமடம், 12. திரு.குருநாதன், 13. திரு V.R. ஜெயராமன் - தேனி, 14. திரு.பாலசுப்ரமணியன் - சீர்காழி, 15. திரு.சந்திரசேகர் - சோழவந்தான் ஆகியோர் இணைந்துள்ளனர். இதனிடையே அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களில் 90 சதவிகிதம் பேர் 1970 முதல் 2000ஆண்டு வரை எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்