தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 56.28 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


 தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை தீவிர கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவநிபுணர் குழுவின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 34805 பரிசோதனைகள் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் அதிகபாட்சமாக 3713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78335ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1939 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 51699ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 56.28%பேர் குணமடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது.