தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், கடலூர் மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

அதன் விவரம் வருமாறு:-

* திருவள்ளூர் பூந்தமல்லி வாக்குச்சாவடி எண் 195- மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் நடைபெறுகிறது.

* தருமபுரி: 181,182 எண் வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

* நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.

* தேனி பெரியகுளம் வடுகப்பட்டி வாக்குச்சாவடி  எண்: 197 சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி.

* தேனி, ஆண்டிப்பட்டி, பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67: அரசுப்பள்ளி.

* கடலூர் பண்ருட்டி வாக்குச்சாவடி எண் 210 திருவதிகை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி.

* காங்கேயம் திருமங்கலத்தில் 248- ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு.