Asianet News TamilAsianet News Tamil

’போட்டுவைத்த தேர்தல் திட்டம் ஓகே கண்மணி’...விருப்ப மனு வசூலில் ஒரு கோடிக்கும் மேல் தேத்திய கமல்...


கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  விருப்ப மனு  செய்தவர்கள் வாயிலாக மட்டும் ஒரு கோடியே பதின்மூன்று லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய் கட்சி நிதியாக வசூலாகியுள்ளது. கமலுக்கு 40 வேட்பாளர்களாவது தேறுவார்களா என்று கிண்டலடித்தவர்களுக்கு இச்செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

1137 cndidates intersted to contest for kamal's party
Author
Chennai, First Published Mar 9, 2019, 10:26 AM IST

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  விருப்ப மனு  செய்தவர்கள் வாயிலாக மட்டும் ஒரு கோடியே பதின்மூன்று லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய் கட்சி நிதியாக வசூலாகியுள்ளது. கமலுக்கு 40 வேட்பாளர்களாவது தேறுவார்களா என்று கிண்டலடித்தவர்களுக்கு இச்செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.1137 cndidates intersted to contest for kamal's party

மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.  இதில் முக்கிய ஹைலைட்டாக, வேறு எந்த அரசியல் கட்சிகளிலும் நடைமுறையில் இல்லாத, கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.1137 cndidates intersted to contest for kamal's party

விருப்ப மனு விநியோகம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து, விருப்ப மனுக்களை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் ரூ.10 ஆயிரம் கட்டணத்துடன் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி மாலையுடன் விருப்ப மனு பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

இறுதி நாளான 7ம் தேதிவரை மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1,137 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் கமல்ஹாசன் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து150-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios