10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வில் 3 தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியிருந்தார்.

மேலும், தேர்வுகள் நடைபெற மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தனிமனித இடைவெளியுடன் இந்த தேர்வு நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தேர்வு நடத்துவதற்கு பஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று ஊரடங்கு நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில் 25 மாவட்டகளிலும் தளர்வுகளும், மற்ற 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியிருந்தார். இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில்,  அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.