10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்காக பள்ளிகளிலும் இன்னும் திறக்கப்படாமல் உள்ள நிலையில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்வுகளை எப்படி நடத்துவது என்ற பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா? என அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து டிசம்பரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே நடப்பு கல்வியாண்டிலும் மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில  முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.