அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் எல்லாம் சும்மா ஜம்முனு இருக்கணும்…. செங்கோட்டையன் எடுத்த அதிரடி நடவடிக்கை..

தமிழகத்தில் உள்ள 20,000 அரசுப் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய, ஜெர்மனி நாட்டிலிருந்து தொண்டு நிறுவனம் மூலம் 1000 நவீன வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் தற்போது வெகுவாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் புதிய கட்டடங்கள், நூலகம், கழிப்பறைகள் என பல வசதிகளை அமைச்சர் செங்கோட்டையன் அமல் படுத்தி வருகிறார்.

நீட் தேர்வுகளில் மாணவர்கள் பாஸ் பண்ண பயிற்சி வகுப்புகள், அரசு பள்ளி மாணவர்கள்  சிறந்த ஆங்கிலப் புலமை பெற லண்டனில் இருந்து பயிற்சி அளிக்க 100 பேராசிரியர்கள் என தமிழக அரசுப் பள்ளிகள் தற்போது அசுர வேகத்தில் முன்னேறி வருகின்றன.

அதே நேரத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் புதிய கழிப்பறைகள் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 20,000 அரசுப் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய, ஜெர்மனி நாட்டிலிருந்து தொண்டு நிறுவனம் மூலம் 1000 நவீன வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.