Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்க அதிபர் வருகைக்காக 100கோடி.! அவருக்காக அகமதாபத்தில் தீண்டாமைச்சுவர்? பொங்கும் சமூக ஆர்வலர்கள்.

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள 'சர்தார் வல்லபாய் படேல்' சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.

100 crore for US President's visit Shame on him in Ahmedabad? Proud social activists.
Author
India Gate, First Published Feb 15, 2020, 10:10 PM IST

T.Balamurukan

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா வருவதையொட்டி ரூ100 செலவில் அகமதாபத் நகரமே ஜொலிக்க உள்ளது. இதற்காக ட்ரம்ப் வரும் பகுதியில் இருக்கும் குடிசை வீடுகளை மறைப்பதற்காக தடுப்பு சுவர் கட்டியிருப்பது பல்வேறு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 

100 crore for US President's visit Shame on him in Ahmedabad? Proud social activists.

இந்தியா வரும் ஜனாதிபதி  டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்க குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகி வருகிறது.அகமதாபாத்துக்கு 24ம் தேதி வரும் டிரம்ப், அங்கு சுமார் 3 மணி நேரம் தங்கி இருப்பார். அகமதாபாத் நகராட்சியும், அகமதபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து வருகின்றது.80 கோடி ரூபாயில் சாலை சீரமைப்பு, புதிதாக சாலை அமைத்தல் பணியும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாயில் பாதுகாப்பு பணியும், 7 கோடி முதல் 10 கோடி ரூபாயில் விருந்தினர்களின் போக்குவரத்து, தங்குவதற்கான ஏற்பாடும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி,டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடும் நடைபெறுகின்றன.

100 crore for US President's visit Shame on him in Ahmedabad? Proud social activists.

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள 'சர்தார் வல்லபாய் படேல்' சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.
இந்த சுவர் தீன்டாமைச்சுவர் போல் இருப்பதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios