Asianet News TamilAsianet News Tamil

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் !! நைசாக நழுவிய அதிமுக !! முடிவெடுக்க முடியாமல் திணறல் !!

பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்ததில் 16 கட்சிகள் எதிர்த்தும், 5 கட்சிகள் ஆதரித்தும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதிமுக எந்த முடிவும் எடுக்காமல் நைசாக நழுவியது.

10 percentage reservation
Author
Chennai, First Published Jul 8, 2019, 11:03 PM IST

பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

10 percentage reservation

கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் பன்னீர்செல்வம் பேசும் போது  கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 மருத்துவ இடங்களை பெற முடியும். நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின்படி 586 மருத்துவ இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும் எனக் கூறினார். 

10 percentage reservation

இதையடுத்து 10 சதவித இட ஒதுக்கீட்டுக்கு திமுக, திக, மக்கள் நீதி மய்யம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 16  கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ், பாஜக, புதிய தமிழகம், கொங்கு முன்னேற்றக் கழகம், சிபிஎம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால் இந்த விவாதத்தில் பங்கேற்ற  அதிமுக எந்தக் கருத்தும் சொல்லாமல் நைசாக நழுவியது. சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களிடம்  விவாதித்து இந்த பிரச்சனையில் அரசு முடிவெடுக்கும் என ஓபிஎஸ்  தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios