Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் 10 ஆக்ஸிஜன்- ஐசியு படுக்கைககள்..!

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
 
10 oxygen-ICU beds in private hospitals under CM insurance scheme
Author
Tamil Nadu, First Published Jun 12, 2021, 6:18 PM IST

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

10 oxygen-ICU beds in private hospitals under CM insurance scheme

கொரோனா தொற்று பரவல் அதிகமான சூழலில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அரசு உத்தரவு பிறப்பித்திருந்தாலும் சில மருத்துவமனைகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும் எந்த வகை சிகிச்சைகளுக்காக படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற குழப்பமும் நிலவி வந்தது. இந்த நிலையில் குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 10 oxygen-ICU beds in private hospitals under CM insurance scheme

அதில் தனியார் மருத்துவமனைளில் ஒதுக்கப்பட்டுள்ள 50% படுக்கைகளில் 10% படுக்கைகள் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளாக இருக்க வேண்டும் என புதிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கப் பட்டிருப்பதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios