"திருடர் குல திலகமே" "ஊழலின் மறு உருவமே" என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூர் மாவட்ட பாஜக வினர் போஸ்டர் அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பாஜக திமுக மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
"திருடர் குல திலகமே" "ஊழலின் மறு உருவமே" என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூர் மாவட்ட பாஜக வினர் போஸ்டர் அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பாஜக திமுக மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து பாஜக, அண்ணாமலை கடுமையாகத் தாக்கி வருகிறார்,

இதையும் படியுங்கள்: எங்கள் வீட்டில் சாப்பிட வாருங்கள் என அழைத்த ஆட்டோ ஓட்டுநர்; உடனே ஒப்புக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!!
இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் சட்டமன்ற தேர்தலில் இருந்து தொடங்கியது ஆகும், செந்தில்பாலாஜி எதிர்த்துப் போட்டியிட்டுதான் அண்ணாமலை மண்ணை கவ்வினார், இதனுடைய வெளிப்பாடாகத்தான் மற்றவர்களைக் காட்டிலும் செந்தில் பாலாஜியை அண்ணாமலை குறி வைப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் " திருடர் குல திலகமே" "ஊழலின் மறு உருவமே" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: அமமுகவில் அதிரடி மாற்றம்.. டிடிவி தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தொண்டர்கள் ஷாக் !
தராசு தட்டில் ஒரு பக்கம் செந்தில் பாலாஜியும், மறுபக்கம் பணக்கட்டுகளும் இருப்பதுபோல அச்சிடப்பட்டுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலைய திட்டத்திற்காக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் BGR நிறுவனத்துடன், கமிஷனுக்காக செந்தில்பாலாஜி ஏற்பாட்டின் பேரில் மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் செந்தில்பாலாஜிக்கு பல கோடி ரூபாய் லஞ்சப்பணம் கிடைத்ததாகவும் அண்ணாமலை ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறார், இந்நிலையில் கரூர் மாவட்ட பாஜகவினர் இதுபோன்ற போஸ்டரை மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் " அணிலுக்கு அடித்த ஜாக்பாட் ஐந்தாயிரம் கோடி" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்ட்டரை பாஜகவினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் காவல்துறையினர் கிழித்து வருகின்றனர். இதேபோல கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்த தமிழக பாஜகவினர், பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி மனு கொடுத்துள்ளனர்.
தற்போது பாஜகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பஜகவினரின் இந்த நடவடிக்கையால் செந்தில் பாலாஜிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது பதவிக்கு ஆபத்தை ஏற்படலாம் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
