எடப்பாடியாரிடம் உளவுத்துறை கொடுத்த ‘மிட்நைட்’ சர்வே ரிப்போர்ட்... கேப்டனை கைகழுவ முடிவெடுத்த அ.தி.மு.க...! செக் வைக்கும் பி.ஜே.பி..!

தே.மு.தி.க.வுக்கு ஷோக்கா ரிவிட் அடிச்சாருய்யா துரைமுருகன். இதைவிட அழுத்தமா ஆப்படிச்சிருக்கணும்.’...இப்படி குதூகலிப்பது தி.மு.க.தானே!? என்று நீங்கள் நினைத்தால், அதை ரப்பர் வெச்சு அழிச்சுக்கோங்க. துரைமுருகனிடம் சுதீஷ் அண்ட்கோ பல்பு வாங்கியதில் அகமகிழ்ந்து கிடப்பது அ.தி.மு.க.தான்.

'Midnight Survey Report'...edappadi palanisamy

’தே.மு.தி.க.வுக்கு ஷோக்கா ரிவிட் அடிச்சாருய்யா துரைமுருகன். இதைவிட அழுத்தமா ஆப்படிச்சிருக்கணும்.’...இப்படி குதூகலிப்பது தி.மு.க.தானே!? என்று நீங்கள் நினைத்தால், அதை ரப்பர் வெச்சு அழிச்சுக்கோங்க. துரைமுருகனிடம் சுதீஷ் அண்ட்கோ பல்பு வாங்கியதில் அகமகிழ்ந்து கிடப்பது அ.தி.மு.க.தான். 

இந்த சம்பவத்துக்குப் பிறகு மார்ச் 8-ல் தங்கள் கட்சி அலுவலகத்தில் மீடியாவை சந்தித்த பிரேமலதா ’கேப்டன் மேலே கூட அபாண்டமா பழிகளை சுமத்துன ஜெயலலிதா பிறகு அவர் கூட கூட்டணி வெச்சாங்க. 2011 தேர்தலில் அ.தி.மு.க. வென்று ஆட்சியமைக்க காரணமே தே.மு.தி.க.தான். ஜெயலலிதா முதல்வராக அமரவும் இதுவே காரணம்.’ என்று என்னமோ அ.தி.மு.க.வுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்ததே தன் கணவர்தான்! எனும் ரேஞ்சுக்கு பிரேமலதா பேசியிருப்பதில் கொதித்துக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். அதன் வெளிப்பாடாகத்தான் துரைமுருகனின் செயலை பாராட்டி தள்ளுகிறார்கள், தங்களுக்குள். 'Midnight Survey Report'...edappadi palanisamy

அதேவேளையில் ‘அம்மாவை அவமரியாதை செய்துவிட்டார் பிரேமலதா. அதனால தே.மு.தி.க.வைன் நம்ம கூட்டணியில் சேர்த்துக்கவே வேண்டாம். இவங்க வராததால ரெண்டு இடம் கிடைக்கலேன்னாலும் பரவாயில்ல. ‘ என்று சீனியர் அமைச்சர்களே எடப்பாடியாரிடம் கடந்த 8-ம் தேதியன்று இரவில் அவசர அவசரமாக பெரும் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடியார் - பன்னீர் இருவரும் இணைந்து ஆலோசனை நடத்தின் ஒரு விறுவிறு சர்வேயை உளவுத்துறை மூலமாக நடத்தினர். ‘தே.மு.தி.க. தங்கள் கூட்டணிக்குள் வரவில்லையென்றால் என்னாகும்?’ என்பதுதான் சர்வேயின் கரு. இதற்கு  சுமார் பத்து மணி நேரங்களில் பதில் அறிக்கை அளித்த உளவுத்துறை ”அ.தி.மு.க.வின் மூன்றாம் கட்ட நிர்வாகிகள் முதல்  தொண்டர்கள் வரை அனைவரும் தே.மு.தி.க. மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

 'Midnight Survey Report'...edappadi palanisamy

அவர்கள் விஜயகாந்த் கட்சி வேண்டாம் என்று வெறுக்கிறார்கள். மீறி கூட்டணி வைத்தாலும் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அ.தி.மு.க.வினரின் வாக்கு அவர்களுக்கு கிடைக்காது. அதேபோல் பொதுமக்கள் மத்தியிலும் பிரேமலதாவின் பேச்சு மிகப்பெரிய எரிச்சலை அந்தம்மா மீது உருவாக்கி இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தது. இதை வாசித்த எடப்பாடியார் கிட்டத்தட்ட தே.மு.தி.க. ஃபைலை மூடி வைக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். இது அ.தி.மு.க.வின் மேல்நிலை வட்டாரத்தின் கவனத்துக்கு வர, அவர்களும் மகிழ்ந்துவிட்டார்கள். 'Midnight Survey Report'...edappadi palanisamy

இது குறித்து விரிவாக நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் நேற்று Special செய்தி வெளியிட்டிருந்தது. தே.மு.தி.க.வின் ஃபைலை மூடிவிடும் முடிவுக்கு எடப்பாடியார் வந்துவிட்டதை பி.ஜே.பி.யின் தமிழக தலைவர்கள் டெல்லி தலைமைக்கு தெரிவிக்க, அங்கே பியூஸ் கோயல் அவசர ஆலோசனை நடத்திவிட்டு தமிழக முதல்வரிடம் ‘தே.மு.தி.க.வை தவிர்க்க நினைக்காதீங்க. 40 தொகுதியிலும் அவங்களுக்கு இருக்கிற வாக்குவங்கி நமக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்பதை கோபத்தில் மறக்க வேண்டாம். அமைதியா இருப்போம்.’ என்றிருக்கிறார். 'Midnight Survey Report'...edappadi palanisamy

இதில் எடப்பாடியார் - பன்னீர் இருவருக்கும் கொஞ்சம் கூட ஒப்புதல் இல்லையாம். ஆனாலும் கூட்டணியின் இன்விசிபிள் மற்றும் வைபரெண்ட் தலைவர் ‘பி.ஜே.பி’ என்பதால் வேறு வழியில்லாமல் தலையாட்டியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்தே நேற்று சேலம் மாவட்டத்தில் தன்னிடம் பத்திரிக்கையாளர்கள் தே.மு.தி.க.வின் அதிரடிகள் பற்றி துருவித் துருவி கேள்விகேட்டபோதும் விஜயகாந்த் தரப்பை விட்டுக் கொடுக்காமல் பதில் சொன்னார் பழனிசாமி. ஆனால் அவர் பல்லைக் கடித்துக் கொண்டுதான் பொறுமை காப்பதாக அ.தி.மு.க.வின் வி.வி.ஐ.பி.க்களே வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios