இரண்டரை கோடி பேர் வேலை இழக்கும் துயரம்..! கொரோனா எதிரொலி..! 

கொரோனாவின்  பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமே முடங்கியுள்ள ஒரு சூழ்நிலையை நம் கண்முன்னே பார்க்கமுடிகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதுமே இரண்டரை கோடி பேர் வேலைவாய்ப்பு இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அனைத்து நாடுகளிலுமே கொரோனா தாக்குதல் தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் அதிகமாக கூடிய இடங்களை தவிர்க்கும் பொருட்டு பல திரையரங்குகள், பள்ளி கல்லூரி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும்  மூடப்பட்டு உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. வீட்டிலிருந்து வேலைவாய்ப்புகள் கொண்டவர்களுக்கு பல நிறுவனங்கள் அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் முன்பதிவு குறைந்துள்ளதால் 168 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளும் சற்று குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால், உலகம் முழுவதுமே இரண்டரை கோடி பேர் வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.