பச்சோந்தி ஏன் தனது நிறத்தை மாற்றுகிறது? இந்த வீடியோவை பாருங்க...
ஒரு பச்சோந்தியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பச்சோந்திகள் என்றாலே அதன் நிறம் மாறும் தன்மை தான் நமக்கு நினைவுக்கு வரும். பச்சோந்திகளில் செல்களில் நிறமி துகள்கள் அதிகமாக இருப்பதால் அவை நிறங்களை மாற்றுவதாக கூறப்படுகிறது. அதேசமயம் செல்கள் முழுவதும் நிறமி சமமாக விநியோகிக்கப்படும் போது, பச்சோந்திகள் கருமையாகத் தோன்றும். ஹார்மோன்கள், வெப்பநிலை மற்றும் பச்சோந்தியின் தன்னியக்க நரம்பு மண்டலம் ஆகியவை பச்சோந்தியின் நிறம் மாறும் தன்மையை தீர்மானிக்கிறது.
இந்த நிலையில் ஒரு பச்சோந்தியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வண்ணமயமான பென்சில்களின் அடுக்கில் ஏறும் போது பச்சோந்தி தனது நிறத்தை மாற்றுவது சமூக ஊடக பயனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. செப்டெம்பர் 8 ஆம் தேதி X சமூக வலைதள பக்கத்தில் Enezator என்ற பயனர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி! எதற்காக தெரியுமா?
அந்த வீடியோவில் நீல நிற பென்சிலில் ஏறும் போது பச்சோந்தி நீல நிறமாகவும், மஞ்சள் நிறத்தில் ஏறும் போது மஞ்சள் நிறமாகவும், ஆரஞ்சு நிற பென்சிலில் ஏறும் போது ஆரஞ்சு நிறமாகவும் மாறுகிறது. அதே போல் பிங்க நிற பென்சிலில் ஏறும் பச்சோந்தி பிங்க் நிறமாக மாறி, தனது உரிமையாளரின் கைகளில் ஏறுவதுடன் வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ பல X பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, பச்சோந்தியின் சூப்பர் பவர் என்று அழைக்கப்படும் நிறம் மாற்றத்தை பார்த்து பலரும் ஆச்சர்த்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள பயனர் ஒருவர் “ இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் இது ஒரு அதிசயம் என்று ஒரு நபர் தெரிவித்தார்.
மற்றொரு நபர் "பச்சோந்திகள் உண்மையிலேயே தனித்துவமானவை" என்று குறிப்பிட்டார். இன்னொரு X பயனர் வீடியோ உண்மையானது அல்ல என்றும் எடிட்டிங் கருவிகளின் உருவாக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.