கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி! எதற்காக தெரியுமா?

இந்த 21 வயது கோழி தற்போது உலகின் வயதான கோழி என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

This Hen Is Now Guinness World Record Holder Do you know why? Rya

பொதுவாக ஒரு கோழியின் ஆயுட்காலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். எனினும் கோழியின் வெவ்வேறு இனங்கள் அல்லது பிற காரணிகளை பொறுத்து ஆயுட்காலம் மாறுபடலாம். ஆனால் ஒரு கோழியின் வயது 20 ஆண்டுகள் 272 நாட்களை எட்டியது. இது உலகின் வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த தம்பதியினர், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை கொண்ட பண்ணை வைத்துள்ளனர். இதில், பீனட் என்ற கோழி, அதிக நாட்கள் உயிர் வாழும் கோழி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

கோழியின் உரிமையாளர் மார்சி பார்க்கர் டார்வின் ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசிய போது "சராசரியாக கோழி ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வாழ்கிறது, எனவே இது ஒரு சாதனை. பீனட் கோழி ஆரோக்கியமான கோழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது, ஆனால் அந்த கோழி பிறந்த போது எப்படி இருந்ததோ தற்போது அப்படி . குஞ்சு பொரிப்பதற்கு முன்பே பீனட்டின் தாய் இறந்துவிட்டது. மேலும் இது அழுகிய முட்டை என்று நான் நினைத்தேன். எனவே அந்த முட்டையை குளத்தில் வீச முற்பட்டபோது உள்ளே இருந்து சத்தம் கேட்டது.

எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட வரி செலுத்த வேண்டாம்.. வருமான வரி இல்லாத நாடுகள் இவை தான்!

நான் மெதுவாக முட்டை ஓட்டை தோலுரித்தேன், அப்போது மிகவும் குட்டியாக இருந்த பீனட்டை பார்த்தே. எனது தாயிடம் அதை கொடுக்க முயன்றேன். ஆனால் என் அம்மா அதை ஏற்க மறுத்துவிட்டார். எனவே நான் சின்னஞ்சிறிய கோழிக்குஞ்சை  வளர்க்க முடிவு செய்தேன். மிகவும் சிறியதாக இருந்ததால் அதற்கு பீனட் (வேர்க்கடலை) என்று பெயரிட்டேன். 

21 வயதான பீனட் கோழி நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற மற்ற விலங்குகளுடன் ஒரே அறையில் வாழ்கிறது. விலங்குகள் தாங்கள் ஒன்றாக இருக்க நேரத்தை செலவிட விரும்புகின்றன, கோழி வெளியில் இருக்க மறுக்கிறது. என வீட்டிற்குள் வந்து என்னுடன் சிறிது நேரம் செலவழிக்கிறது, சில சமயங்களில் பீனட் கோழி என்னுடன் அமர்ந்து டிவி பார்க்கும்” என்று தெரிவித்தார். 

பீனட்டிற்கு முன்பு,மஃபி என்ற கோழி மிகவும் வயதாக கோழியாக இருந்தது. 23 வயது மற்றும் 152 நாட்கள் இந்த கோழி வாழ்ந்த நிலையில், அது 2011-ல் இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios