கவன ஈர்ப்பு!

ஆண்கள் துணையிடம்  எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் கவன ஈர்ப்பு. துணை தங்களை ஒரு பெரிய விஷயமாக கருத வேண்டும் என நினைப்பார்கள். திருமணம்தான் ஆகிவிட்டதே என பெண்கள் சற்று அலட்சியம் காட்டினால், தன்மீது கவன ஈர்ப்பு காட்டும் பிற பெண்களிடம் ஆண்கள் நிலை தடுமாற வாய்ப்பு உண்டு

விளையாட்டு!

நாள் முழுக்க வேலை, வேலை என்று உழைத்து சோர்ந்து போகும் ஆண். வேலை முடித்த பிறகு கொஞ்ச நேரம் விளையாடி பொழுதை கழிக்க நினைப்பது உண்டு. துணையிடம் இருந்து கிடைக்காத பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் பேசுதல், சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளிட்டவை வேறு பெண்ணிடம் கிடைத்தால் அந்தப் பெண்ணுடன் நேரம் செலவிட நினைக்கலாம்.

மகிழ்ச்சி முக்கியம்!

பெண்களின் சந்தோஷத்திற்கு தாங்கள் காரணமாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு இருக்கும். எப்படியாவது துணையை திருப்தி படுத்திவிட நினைப்பார்கள். ஆனால், துணை தட்டிக்கழித்து கொண்டே போனால் யார் தன்னுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக உணர்கிறாரோ, அல்லது தன்னை மகிழ்ச்சியாக உணர செய்கிறாரோ அவருடன் நெருக்கமாக பழகலாம்

உதவும் கரங்கள்

பெண்கள் தங்களை மதித்து உதவி என்று கேட்டால் உடனே அவர்களுடன் நெருக்கம் காண்பிப்பது ஆண்களின் வழக்கம்

வெற்றி நோக்கம்

ஆண்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்க காரணம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். விளையாட்டில் ஆர்வம் காண்பிக்கும் பெண்களுடன் எளிதில் நெருக்கமாக பழகும் பழக்கம் ஆண்களிடம் இருக்கிறது.

நாடகங்கள் பிடிக்காது

ஆண்கள் ரியாலிட்டியில் வாழ்பவர்கள். பெண்கள் கொஞ்சம் நாடகத்தனமான காதலை விரும்புபவர்கள். துணையின் டிராமாக்கள் பிடிக்காத போது வேறு பெண்கள் மீது ஆர்வம் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.