- Home
- Lifestyle
- School Bus: ஸ்கூல் பஸ் ஏன் மஞ்சளா இருக்கு? சும்மா இல்ல, இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சயின்ஸ் இருக்கு!
School Bus: ஸ்கூல் பஸ் ஏன் மஞ்சளா இருக்கு? சும்மா இல்ல, இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சயின்ஸ் இருக்கு!
School Bus Paint : ஸ்கூல் பஸ் ஏன் எப்பவும் மஞ்சள் நிறத்துல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? சிவப்பு, நீலம் மாதிரி வேற கலர் ஏன் இல்ல? இதுக்கு பின்னாடி கிட்டத்தட்ட 90 வருஷ பழமையான ஒரு அறிவியல் காரணமும் இருக்கு.

School bus yellow color secret
ரோட்ல மஞ்சள் கலர் பஸ்ஸைப் பார்த்தாலே அது ஸ்கூல் பசுன்னு நாம டக்குனு புரிஞ்சிப்போம். ஆனா, உலகத்துல இருக்குற எல்லா நாட்டுலயும் ஸ்கூல் பஸ்ஸுக்கு ஏன் மஞ்சள் நிறம் அடிக்கிறாங்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இதுக்குப் பின்னாடி எந்த ஃபேஷனும் இல்ல, முழுக்க முழுக்க அறிவியலும், மாணவர்களோட பாதுகாப்பும்தான் காரணம்.
School Student: பள்ளி வேலை நாட்களில் அதிரடி மாற்றம்! இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!
1939-ல் தொடங்கிய கதை
இந்தக் கதை அமெரிக்காவுலதான் ஆரம்பிச்சது. 1939-ல் அமெரிக்காவுல கல்வி சம்பந்தமா ஒரு பெரிய மாநாடு நடந்துச்சு. அந்த மாநாட்டுல, ஸ்கூல் பஸ்களுக்கு தூரத்துல இருந்து பார்த்தாலும் பளிச்சுனு தெரியுற மாதிரி ஒரு நிறத்தை தேர்வு செய்யணும்னு முடிவு பண்ணாங்க. அப்போதான் மாணவர்களோட பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்னு பேசிக்கிட்டாங்க.
அப்போ பல நிறங்களை வெச்சு சோதனை செஞ்சாங்க. அந்த மாநாட்டுல கலந்துகிட்ட ஃபிராங்க் டபிள்யூ. சைர் (Frank W. Cyr) என்ற பேராசிரியர் ஒரு குறிப்பிட்ட மஞ்சள் நிறத்தை பரிந்துரை செஞ்சார். அந்த நிறத்துக்கு 'நேஷனல் ஸ்கூல் பஸ் க்ளாஸி யெல்லோ' அப்படின்னு பேர் வெச்சாங்க. பின்னாடி 1970-கள்ல, இந்த பேரை 'நேஷனல் ஸ்கூல் பஸ் க்ரோம் யெல்லோ' அப்படின்னு மாத்துனாங்க. அன்னைக்கு ஆரம்பிச்ச இந்த பழக்கம்தான் இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு.
சரி, ஆனா ஏன் மஞ்சள் நிறம்? அறிவியல் காரணம் என்ன?
இதுக்கு பின்னாடி 3 முக்கியமான அறிவியல் காரணங்கள் இருக்கு:
1. எளிதில் கண்ணில் படும்: விஞ்ஞானப்படி, சிவப்பு நிறத்தை விட மஞ்சள் நிறம் சுமார் 1.24 மடங்கு வேகமா மனுஷங்களோட கண்ணுக்குத் தெரியும். அடர்த்தியான பனி, மழை, ஏன் இருட்டுல கூட மஞ்சள் நிறத்தை தூரத்துல இருந்து சுலபமா பார்க்க முடியும். குழந்தைகளோட பாதுகாப்புக்கு இதுதானே ரொம்ப முக்கியம்.
2. பெரிஃபெரல் விஷன் (Peripheral Vision): நாம நேரா பார்த்துட்டு இருக்கும்போது, ஓரக்கண்ணுல சுத்தி இருக்குற விஷயங்களையும் பார்ப்போம் இல்லையா? அதுக்கு பேருதான் பெரிஃபெரல் விஷன். மத்த நிறங்களை விட மஞ்சள் நிறம் ஓரக்கண் பார்வைக்குக் கூட ரொம்ப பளிச்சுனு தெரியும்னு சோதனைகள்ல கண்டுபிடிச்சிருக்காங்க. இதனால, மத்த டிரைவர்கள் தூரத்துல இருந்தே ஸ்கூல் பஸ் வருதுன்னு உஷாராயிடுவாங்க.
கருப்பு எழுத்து ஏன்?
3. கருப்பு எழுத்துக்கள்தெளிவாகத் தெரியும்: ஸ்கூல் பஸ் மேல கருப்பு நிறத்துல 'SCHOOL BUS'னு எழுதியிருப்பாங்க. மஞ்சள் நிறப் பின்னணியில கருப்பு எழுத்துக்கள் ரொம்ப எடுப்பாகவும், தெளிவாகவும் தெரியும். இதனால தூரத்துல இருந்து கூட அந்த எழுத்துக்களை சுலபமா படிக்க முடியும்.
அதனால, இது வெறும் பாரம்பரியம் மட்டும் இல்ல, குழந்தைகளோட பாதுகாப்பை மனசுல வெச்சுதான் 90 வருஷமா இந்த மஞ்சள் நிறம் ஸ்கூல் பஸ்களோட அடையாளமா இருந்துட்டு வருது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

