எடையை குறைக்க சூடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து யாரெல்லாம் குடிக்க கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்காக சிலர் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கிறார்கள். தினமும் காலையில் எளிதில் தயாரிக்க கூடிய இந்த பானத்தில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை.
ஏனெனில், எலுமிச்சை வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும். அதுபோல தேன் காயங்களை குணப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் தான் எடையை குறைக்க பெரும்பாலானோர் இந்த பானத்தை குடிக்கிறார்கள். இந்த பானம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது என்றாலும், அது அனைவருக்கும் ஏற்றது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆம் ஆயுர்வேத நிபுணர்கள் கூற்றுப்படி, லெமன் மற்றும் தேன் கலந்த பானம் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், ஒரு சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுமாம். எனவே, இந்த பதிவில் யாரெல்லாம் சூடான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்க கூடாது என்று பார்க்கலாம்.
இந்த பானத்தின் நன்மைகள் :
சூடான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிப்பது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை எரிக்க அல்லது கரைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பானம் சிறந்த தேர்வு. ஆனாலும், உடற்பயிற்சி மற்றும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் வலுவாக இருக்கும். வீக்கம், வயிறு உப்புசம் ஏற்படாது.
எப்படி குடிக்கணும்?
அதிக சூடான நீரில் அல்ல, மிதமான சூட்டில் இருக்கும் நீரில் தான் தேன் சேர்க்க வேண்டும். வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் தேன் கலந்தால் அது விஷமாக மாறிவிடும். அதுபோல ஒரு ஸ்பூன் தேனுக்கு மேல் சேர்க்கக்கூடாது. தேன் கலந்த பிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
யாரெல்லாம் குடிக்க கூடாது?
1. அமில ரிஃப்ளக்ஸ்
வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். ஏனெனில் லெமனில் இருக்கும் சிட்ரிக் அமிலம் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்க செய்யும்.
2. இரைப்பைல் புண்
இரைப்பைப் புண் என்பது வயிற்றில் புண்கள் உருவாகும் ஒரு நிலையாகும். சூடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது இரைப்பை புண் பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும். லெமனில் உள்ள அமிலம் புண்ணை மேலும் அதிகரிக்கும் மற்றும் பிரச்சனையை தீவிரமாக்கும். தேன் சூடான விளைவை கொண்டிருப்பதால் இந்த பிரச்சனையை அதிகரிக்கும்.
3. பற்கள் பிரச்சனை
சூடான நீரில் எலுமிச்சை சாறு தேன் கலந்து குடித்தால் பற்கள் பிரச்சினை அதிகரிக்கும். ஏனெனில் லெமனில் சிட்ரிக் அமலம் உள்ளதால், அது பல் எனாமலை பலவீனப்படுத்தும், பல் சிதைவு மற்றும் உணர் திறனை ஏற்படுத்தி விடும். எனவே பல பிரச்சினை உள்ளவர்கள் இந்த பானத்தை குடிக்காமல் இருப்பது நல்லது.
4. சிறுநீரகக் கற்கள்
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சூடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க கூடாது. அவ்வாறு செய்வது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட்டின் அளவை அதிகரித்து விடும்.
அதுபோல மூட்டு வலி, பலவீனமான எலும்புகள், வாய்ப்புண் இருப்பவர்கள் இந்த பானத்தை அருந்தாமல் இருப்பது நல்லது.
