Asianet News TamilAsianet News Tamil

கோவிலில் நமக்கு கொடுக்கும் சாமி பூவை என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு அர்ச்சகர் நம் கைகளில் பூவை கொடுப்பார். அந்த பூவை பெண்கள் தலையில் வைத்துக் கொள்வார்கள் 

what we should do the  flowers which we got from the temple
Author
Chennai, First Published Jul 6, 2019, 12:03 PM IST

கோவிலில் நமக்கு கொடுக்கும் சாமி பூவை என்ன செய்ய வேண்டும் தெரியுமா..? 

நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு அர்ச்சகர் நம் கைகளில் பூவை கொடுப்பார். அந்த பூவை பெண்கள் தலையில் வைத்துக் கொள்வார்கள் . இது தான் அனைவருக்கும்  தெரிந்த ஒன்று. ஆனால் கோவில்களில் வழங்கப்படும் பூக்கள் மற்றும் பிரசாதங்கள் அனைத்துமே நிர்மால்யம் என அழைக்கப்படுவார்கள்.

what we should do the  flowers which we got from the temple

இதன் அர்த்தம் தூய்மையானது.. அழுக்கற்றது.. அதில் இறைவனின் அருள் சக்தி நிறைந்து இருக்கும். எப்போதும் கோவிலுக்கு செல்லும்போது நம் கைகளில் கிடைக்கும் மலர்கள் மற்றும் பிரசாதங்கள் அனைத்தும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை முதலில் உணர வேண்டும். அதன்படி சுவாமி தரிசனம் முடித்த பிறகு பெரும் பூக்களை முதலில் பக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொண்டு பிறகு நெற்றியிலும் ஒற்றிக் கொண்டு இருதயத்தில் வைத்து இறை அருள் நம்முள் உட்செல்வதாக எண்ணுதல் வேண்டும்.

what we should do the  flowers which we got from the temple

அதன் பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு பூஜை அறையில் வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த பூக்கள் வாடி இருப்பின் அவற்றை நீர்நிலைகளிலோ அல்லது மரங்களின் கீழே வைத்து விடுதல் நல்லது. இவ்வாறு தான் கோவிலில் இருந்து பெறப்படும் பூக்களை நாம் பயன்படுத்த வேண்டும் அதே போன்று அந்த பூக்களில் பண்களும் தலையில் வைத்துக் கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios