What is the miracle that happens if you go to nandhi temple

நந்தியின் வாயில் வழியும் நீர் – 7000 வருடங்களை கடந்த அதிசயம்

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோவில்களும் மாபெரும் சிறப்பு வாய்ந்தது. இனி இது போன்ற கோவில்களை கட்ட முடியுமா என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. எவ்வளவு பிரமாண்டமாக கோவில்கள் அந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு காஞ்சி காமாட்சியம்மன் கோவில் முதல் தஞ்சை பெரிய கோவில் வரை அனைத்தும் சொல்லலாம்.

இதே போன்று, நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. இதுதான் இந்த கோவிலின் சிறப்பு.

"எங்கு உள்ளது இந்த கோவில்?"

கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்”. இந்த கோவில், கிட்டதட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

"நந்தியின் வாயில் தொடர்ந்து வழியும் நீர்"

இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக மற்ற கோவில்களில் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது தான் சிறப்பான ஒரு விஷயம்.

"யாருக்குமே தெரியாத ஒரு புதிர்..!"

நந்தியின் வாயிலிருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

"தீராத நோய்கள் தீரும்"

இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் எப்பொழுதும் இந்த கோவிலில் அதிக பக்தர்கள் கூடி இருப்பார்கள்.

குறிப்பு: சிவபெருமானை அபிஷேகித்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று வராலம். மாற்றத்தை உணரலாம்!