நாம் இருப்பது "2 ஆம் கட்டம்"..!  உடனே செய்ய வேண்டியது என்ன..?

சீனாவில் தொடங்கி, ஹஈரான், ஈராக், இத்தாலி,பாகிஸ்தான், இப்ப இந்தியா வந்தடைந்து விட்டது கொரோனா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியா வந்த வெளிநாட்டவர் மூலமாக தான் இந்தியாவை எட்டி பார்த்தது கொரோனா.

அவர்கள்  மூலமாக தற்போது 200 கும் அதிகமான இந்திய மக்கள் கொரோனானால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிலையில கொரானா பராவுதலாய்  லய்யுப்படுத்த வேண்டிய  சூழ்நிலையால்  நாம் உள்ளோம்.அதாவது

முதல் ஸ்டேஜ் 

வெளிநாட்டில் இருந்து இந்தியா வானதாவர் மூலமாக...ஒருவரிடமிருந்து மாற்றவருக்கு என இதுவரை 250 கும்  அதிகமானோரை பாதித்து விட்டது கொரோனா.

2 ஆவது ஸ்டேஜ் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 250 பேருக்கும் அதிகமானோர் தனிமை படுத்தப்பட்டு இருந்தாலும், கொரோனா உறுதி செய்வதற்கு முன் அவர்கள் நடமாடிய இடங்கள், சென்று வந்த உறவினர் வீடுகள், நண்பர்கள் , அக்கபத்தினர், பயணம் செய்த போது வேறு யாருக்கெல்லாம் தொற்றியதோ தெரியாது... எனவே இதனை  கட்டுப்படுத்த தவறினால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு  இருக்கும்.அதற்காகத்தான் பாரத பிரதமர்  நாளை ஒரு நாள் ஊரடங்கு மக்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நாளை மக்கள் ஊரடங்கு என்பதால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் போது வெளியில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் தானாகவே எந்த கிருமிநாசினியும் அடிக்காமல்அதனை அழித்து விட முடியும்." break the chain" என்ற முறையில் கொரோனா பரவுதலை  கட்டுப்படுத்த முடியும். எனவே மக்களாகிய நாம் நம்மை நாமே "தனிமையாக்கி" கொள்வது  நல்லது. 

இதனை பொருட்படுத்தாமல், விளையாட்டாக  வெளியில சென்று வருவதையும், இதன் காரணமாக தாம் மட்டும் பாதிக்கப்டுவது மட்டுமல்லாமல் நம்மால்  பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும் 

இதற்கும் அடுத்த படியாக சொல்ல வேண்டும் என்றால், இத்தாலியில் மட்டும் இதுவரை 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 70 வயதிற்கு மேற்பட்டோரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம் என இத்தாலி அரசே முடிவு செய்து விட்டது. எந்த மருத்துவமனையில்... எத்தனை பேரை தான் அனுமதிக்க முடியும்... ஒரு கட்டத்தில் அரசே கைவிட்டு விட்டது. இந்த நிலையில் இத்தாலியில் 4 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் உயிரிழந்ததை அடுத்து எப்படி தான் கட்டுப்படுத்த போகிறோமோ என விழி பிதுங்கி உள்ளது. இதனை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு.. தயவு செய்து வெளியில் செல்வதை நாம் நிறுத்த வேண்டும். இல்லையேல் இக்கட்டான சூழ்நிலை வந்தால்...சமாளிக்க முடியாது. பிறகு அரசை குறை கூறுவது முட்டாள்தனம்.