ஏப்ரல் ஃபூல் பதிலாக ஏப்ரல் கூல்... தமிழக இளைஞரின்வைரல் வெற்றி  வாக்கியம்...!

ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி என்றால் போதுமே...பள்ளி குழந்தைகள்   முதல், கல்லூரி மாணவர்கள்,பெரியவர்கள் என அனைவருமே,ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று உலக முட்டாள்கள் தினம் என எண்ணி  மற்றவர்களை  கிண்டல் செய்து கொன்ப்டாடி மகிழ்கின்றனர்

முட்டாள்கள் தினம் எதற்கு..?

ஏப்ரல் 1  ஆம் தேதியன்று மற்றும் யாரையாவது ஏமாற்றிவிட்டால் அன்று  அவர்கள் முட்டாள் ஆக்கப்படுகிறார்கள்...அதில் ஒரு சந்தோஷமும் கூட...

நாளைய தினத்தில், நண்பர்களை எப்படி ஏமாற்றலாம்.....எப்படி ஒரு  அதிர்ச்சி செய்தி சொல்லலாம்..? அதிர்ச்சி செய்தியால் மற்றவர்கள் எப்படி  எல்லாம் பதறுகிறார்கள்..?

இதே போன்று காதல் செய்பவர்கள் தங்களது காதலன் அல்லது காதலிக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்து அதனால் அவர்கள் அடையும்  துன்பத்தை காண வேண்டும் என்பதை முன்வைத்து இது போன்ற  செயல்களில் ஈடுபடுவதால் எந்த லாபமும் இல்லை என்பது தான் உண்மை....

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதுநாள் வரை எதற்காக இந்த முட்டாள்  தினம்..எதற்காக மற்றவர்களை ஏமாற்றி நாம மகிழ வேண்டும் என  நினைத்த தமிழக இளைஞர் ஒருவர்..."ஏப்ரல் ஃபூல் பதிலாக ஏப்ரல் கூல்" இருக்கட்டுமே....

இன்றைய நாளில்,மரம் செடி நட்டு வைத்து,இனி வரும் ஆண்டுகளில்  இது போன்ற கோடை வெயிலில் தம்மை பாதுகாத்துக்கொள்ளவாது  பயன்படுமே...என்ற நோக்கில் இந்த வசனத்தை பதிவிட்டு உள்ளனர்

ஏப்ரல் ஃபூல் வேண்டாமே ஏப்ரல்கூல் போதுமே.... 

இந்த வசனத்தை தாரக மந்திரமாக எடுத்த பல இளைஞர்கள், சமூகவலைத்தளங்களில் அதிக ஆர்வத்தோடு பகிர்ந்து வருகின்றனர்

மாற்றம் வேண்டும்

இது மட்டும் இல்லாமல்,சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு  போராட்டம்  நடத்தி மாபெரும் சாதனை படைத்த இளைஞர்கள் தற்போது பல்வேறு  குழுக்களாக இணைந்து செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது...

ஒரு குழுவாக இணையானது விவசாய பெருமக்களுக்கு உதவ,  விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

அதே போன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதிலிருந்து இன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அதிக  அக்கறை உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே,நாளை யாரும் மற்றவர்களை ஃபூல் ஆக்காமல் அதற்கு பதிலாக  பகுத்தறிவு உடன் செயல்பட்டு,மரம் செடி நட்டு இயற்கையை காப்போம்  என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது.