Asianet News TamilAsianet News Tamil

கர்ப்ப காலத்தில் இந்த 6 அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க.. பிரச்சனையாகிடும்!

Warning Signs Of During Pregnancy : கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகளை பற்றி இங்கே சொல்லுகிறோம்.

warning signs of during pregnancy that you should not ignore in tamil mks
Author
First Published Aug 24, 2024, 12:31 PM IST | Last Updated Aug 24, 2024, 12:41 PM IST

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல உடல் மற்றும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறிப்பாக வாந்தி, மயக்கம், குமட்டல், சோர்வு, உடல் வலி மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகள் வருவது மிகவும் பொதுவானவை. ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில அறிகுறிகளை தவறுதலாக கூட அலட்சியம் செய்யக்கூடாது. அது உங்கள் ஆரோக்கியத்திற்கும், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு பெண் கர்ப்ப காலத்தில் இயல்பான மற்றும் தீவிர அறிகுறிகளுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் இதுபோன்ற அசாதாரண அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை சந்திக்கவும். அந்த வகையில், இந்த கட்டுரையில் கர்ப்ப காலத்தில் புறக்கணிக்கக்கூடாதா அறிகுறிகளை பற்றி இங்கே சொல்லுகிறோம்.

இதையும் படிங்க:  கர்ப்ப காலத்தில் உடலுறவு வைக்கலாமா? இதனால் கருச்சிதைவு ஏற்படுமா? உண்மை இதோ!!

கர்ப்ப காலத்தில் புறக்கணிக்க கூடாத அறிகுறிகள் :

1. வயிற்று வலி :

கர்ப்ப காலத்தில் சில நேரங்களில் வயிற்று நடுப்பகுதி அல்லது மேல் பகுதியில் வலி ஏற்படுவது வழக்கம். சில சமயங்களில் அமிலத்தன்மை, அஜீரணம் அல்லது தவறான முறையில் சாப்பிடுவதால் இந்த வலி ஏற்படும். ஆனால், கர்ப்ப காலத்தில் இந்த வலி அதிகரித்தால் உடனே புறக்கணிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். இது  கருசிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது வேறு தீவிர நிலைகளின் அறிகுறியாக இருக்கும்.

2. தொடர் தலைவலி :

கர்ப்ப காலத்தில் தலைவலி வருவது ஒரு பொதுவான விஷயம். ஆனால், அது தொடர்ந்து வந்தாலோ, மருந்து ஏதும் சாப்பிட்டும் குணமாகவில்லை என்றாலோ உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனெனில், இது சில கடுமையான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

3. முகம் வீக்கம் :

கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால், உங்கள் முகத்தில் வீக்கத்தை கண்டால் அதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில், இது காய்ச்சல், தலைவலி, தலை சுற்றல், வயிற்றில் வாயு போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையது. அதுமட்டுமின்றி, இது அதிக இரத்த அழுத்தத்தாலும் வரலாம்.

இதையும் படிங்க:  கர்ப்பிணி பெண்களே... மழைக்காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...!

4. மங்கலான பார்வை :

கர்ப்ப காலத்தில் மங்கலான பார்வை அல்லது பார்வை குறைபாடு இருந்தால் உடனே அதை புறக்கணிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனெனில், இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

5. அதிகப்படியான வாந்தி :

கர்ப்ப காலத்தில் காலை சுகவீனம் அல்லது வாந்தி வருவது ஒரு பொதுவான விஷயம் தான். ஆனால், அதிகப்படியான வாந்தி வரும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இது சில தீவிர பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கும். குறிப்பாக அதிக காய்ச்சல் அல்லது வாந்தியுடன் மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

6. குழந்தையின் அசைவை உணராமல் இருப்பது :

பொதுவாகவே கர்ப்பத்தின் இருபதாவது வாரத்திலேயே குழந்தையின் அசைவை உணர்வீர்கள்.  குழந்தை குறைந்தது பத்து முறையாவது அசையும். ஆனால், உங்களால் குழந்தையின் அசைவை உணர முடியவில்லை என்றால், அசால்ட்டா இருக்காமல், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios