கர்ப்ப காலத்தில் உடலுறவு வைக்கலாமா? இதனால் கருச்சிதைவு ஏற்படுமா? உண்மை இதோ!!
Pregnancy Sex : கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது சரியா தவறா? இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
செக்ஸ் கணவன் மனைவி வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கம். ஆனால், அதைப்பற்றி கவனமாக இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில், உடலுறவு தொடர்பான பல கேள்விகள் பலரது மனதிலும் எழுகிறது. அவற்றில் ஒன்றுதான் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? இல்லையா? என்பது தான்.
பொதுவாகவே, கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் உடலில் மாற்றங்கள். எனவே, இந்த காலகட்டத்தில் கர்பிணிகள் நடப்பது, எழுதுவது முதல் உணவு பழக்கம் வரை என அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணி பெண்ணின் மனம் மற்றும் உடல் நிலை வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மன அழுத்தத்திற்கு ஆளானால், அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு பாதுகாப்பானதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு உடலுறவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. ஆனால், அதில் பெண் வசதியாக இருப்பதை பொறுத்துதான். ஒரு பெண்ணின் கர்ப்பம் ஆரோக்கியமாகவும், அனைத்தும் இயல்பாகவும் இருந்தால் அவள் மூன்றாவது மாதங்களுக்கு பிறகு உடல்ரீதியான உறவுகளை வைத்துக் கொள்வது நல்லது. பல பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட விரும்புவதில்லைம் அது பொதுவானது தான். அத்தகையசூழ்நிலையில், உடலுறவுகளை மட்டும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களும் உங்கள் துணையும் அரவணைப்பது, முத்தம் கொடுப்பது போன்ற உங்கள் தேவைகளை வெவ்வேறு வழிகளில் பூர்த்தி செய்யுங்கள்.
இதையும் படிங்க: சுக பிரசவம் ஆகனுமா...? அப்ப கர்ப்ப காலத்தில் தினமும் காலை 'இத' மட்டும் செய்ங்க..!
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?
மருத்துவர்களின் கூற்றுப்படி கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பப்பையின் வலுவான தசைகள் குழந்தையை வயிற்றில் முற்றிலும் பாதுகாப்பாக வைத்திருக்கும். எனவே, உடலுறவு கொள்ளும் போது குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளே! சர்க்கரை நோய் இருந்தால் ஜாக்கிரதை...குழந்தைக்கு 'இந்த' ஆபத்தான பாதிப்புகள் வரும்!
எந்த பொசிஷன் நல்லது:
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள விரும்பினால் சிறந்த பொசிஷன் மிகவும். இதற்கு நீங்கள் கரண்டி நிலை, அதாவது செக்ஸ் ஸ்பூன் பொசிஷன் தான் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது கர்ப்பிணிகளுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது மற்றும் அவர்கள் அசெளகரியமாகவும் உணர மாட்டார்கள். மேலும், இந்த பொசிஷன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது.
கர்ப்ப காலத்தில் எப்போது உடலுறவு கொள்ளக்கூடாது?
- உங்களது கர்ப்பம் அதிக ஆபத்தாக இருந்தால் உடலுறவு தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு வேண்டுமானால், மருத்துவரின் ஆலோசனையை முதலில் பெறுங்கள்.
- பெண்ணின் நச்சுக்கொடி கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால், ஆபத்தான இரத்தப்போக்கு ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், கர்ப்பிணி பெண் உடலுறவு கொள்ளவே கூடாது.
- இரத்தப்போக்கு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கசிவு ஏற்பட்டாலும் கூட, கர்ப்பிணி பெண்கள் உடல் ரீதியான உறவை தவிர்க்க வேண்டும்.
- இது தவிர, அடிக்கடி வயிறு வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவுகளை தவிர்க்க வேண்டும்.
- அதுபோல கர்ப்பத்தின் ஆறாவது மாதம் தொடக்கத்தின் முதல் கடைசி வரை உடலுறவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கரு சிதைவுக்கு வழிவகுக்கும் மற்றும் சிக்கலை அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D