நம்வாழ்கையில் பின்பற்றவேண்டிய பல நிகழ்வுகளை நம் முன்னோர்கள் ஏற்கவே சொல்லி வைத்துள்ளர்கள்.எதை செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எந்தெந்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும்?

அதவது ஒரு சில பொருளை கடனாக  வாங்கலாம்.திருப்பி கொடுக்கலாம்.ஆனால் ஒரு சிலவற்றை  கடனாகவோ அல்லது பயன்படுத்தி நாமே வைத்துக்கொண்டாலோ அதனால் ஏற்படும் விளைவுகள்  என்னென்னே என்பதை பார்க்கலாம்.

எந்தெந்த பொருட்கள் தெரியுமா ?

பேனா – ஒருவரிடம்  எழுதும் பேனாவை வாங்கி பயன்படுத்திவிட்டு திருப்பி தராமல் இருந்தால் அவர்களுக்கு  அவமானம் ஏற்படுமாம்.கூடவே வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்களாம்.

நாம் பயன்படுத்தும் படுக்கையை, தன் துணையை தவிர, மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொண்டால், அவர்கள் இருவருக்கும்  அடிக்கடி சண்டை  ஏற்படுமாம்

மற்றவரின் கை கடிகாரத்தை வாங்கி பயன்படுத்தி வந்தால், அதிக வறுமைக்கு தள்ளப்படுமாம் .அதே வேளையில் எதை தொடங்கினாலும் வாழ்வில் தோல்வியை சந்திக்க நேரிடுமாம்.

மற்றவர்களின் உடையை  நாம் அணிந்தால் நம் கையில் பணம் தங்கவே தங்காதாம்

மற்றவரின் கைகுட்டையை வாங்கி பயன்படுத்தினால், வறுமையின் உச்சகட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லுமாம்.

மிக முக்கியமாக மற்றவரிடம் பணம் வாங்கி நம் புழப்பை நடத்தினால், பணம் கொடுத்தவரின் துரதிர்ஷ்டம் நம்மை வந்தடையும் .

இது போன்ற பல சாங்கியங்கள் காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு தான் வருகிறது.