தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதன் மூலம் 72 லட்சம் குழந்தைகள் பயன்பெற முடியும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். பொதுமக்கள் பயணம் மேற்கொண்டால் கூட, பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சொட்டு மருந்து விட அமைக்கப்படும் சிறிய முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, நாளைய தினத்தில் மறக்காமல் தங்களுடைய குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விடுங்கள் பயன்பெறுங்கள்.