Asianet News TamilAsianet News Tamil

தேங்காயை இப்படி சேமிங்க.. 6 மாசமானாலும் கெட்டுப்போகாது.. ஃப்ரிட்ஜ் இல்லாதவர்களுக்கும் டிப்ஸ் இருக்கு!

Coconut Tips : தேங்காய் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் அதை எப்படி சேமிப்பது என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

tips and tricks to store coconut fresh for a long time in tamil mks
Author
First Published Aug 14, 2024, 10:02 AM IST | Last Updated Aug 14, 2024, 10:18 AM IST

தேங்காயின் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பதால் பலர் தங்களது வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேங்காய் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால், அப்படி வாங்கி வைக்கும் தேங்காய் பல சமயங்களில் அழுகி அதை குப்பைத் தொட்டியில் போட வேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், தேங்காய் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் அதை எப்படி சேமிப்பது என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

தேங்காய் கெட்டுப் போகாமல் அதை நீண்ட நாள் சேமிக்க டிப்ஸ்:

தேங்காயில் இரண்டு வகைகள் உண்டு அதாவது, தேங்காயின் நிறம் அடர்த்தியாக இருந்தால் அதை பழைய காய் என்றும், அதுவே சற்று லைட்டான நேரத்தில் இருந்தால் அதை புதிய காய் என்றும் சொல்லுவார்கள். பொதுவாக, பழைய காய் அவ்வளவு விரைவில் கெட்டுப் போகாது. ஆனால், புதிய காய் சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது தெரியுமா?

தேங்காய் நார் உரிக்கப்பட்டிருந்தால், அதன் குடும்பி பக்கம் மேலே இருக்குமாறு அடுக்கி வைக்கவும். ஆனால், அதை அடிக்கடி நகர்த்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், தேங்காயில் இருக்கும் தண்ணீர் அதன் மூன்று கண்களிலும் படாமல் இருக்கும். இல்லையெனில், அதன் கண்ணில் தண்ணீர் பட்டால் தேங்காய் சீக்கிரம் அழுக ஆரம்பித்து விடும். இந்த முறையில் தேங்காயை சேமித்தால் ஆறு மாசம் வரை கூட தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதையும் படிங்க:  இல்லத்தரசிகளுக்கான யாரும் சொல்லாத சூப்பரான சமையல் குறிப்புகள்!!

உடைத்த தேங்காயை சேமிப்பது எப்படி?

உடைத்த தேங்காயை என்றால் அதன் கன்னி பகுதியை முதலில் பயன்படுத்துங்கள். ஒருவேளை உங்களது வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்றால், உடைத்து தேங்காயை ஒரு வெள்ளை துணியில் கட்டி பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் தேங்காயை போட்டு வைக்கவும். இந்த தண்ணீரை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை தேங்காய் சில்லாக இருந்தாலும் கூட இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம். அதுமட்டுமின்றி, தேங்காய் மூடியில் சிறிதளவு உப்பு தடவி வைத்தாலும் கூட தேங்காய் சீக்கிரம் கெட்டுப் போகாது.

இதையும் படிங்க:  10 நிமிடங்கள் போதும்.. கைகளில் கறை படியாமல் வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்யலாம்!!

ஃப்ரிட்ஜில் சேமிப்பது எப்படி?

உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருந்தால் தேங்காய் துருவி அதை ஒரு காற்று போகாத டப்பாவில் வைத்து ப்ரீசரில் வைக்கவும். தேங்காய் சில்லாக இருந்தால் அதை ஒரு சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் துண்டுகளை போட்டு அதை ஃப்ரிட்ஜில் ஏதாவது இடத்தில் வைக்கவும் இப்படி செய்தால் தேங்காய் கெட்டுப் போகாமல்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios