இல்லத்தரசிகளுக்கான யாரும் சொல்லாத சூப்பரான சமையல் குறிப்புகள்!!
Cooking Tips : இன்றைய கட்டுரையில் உங்களுக்காக சில பயனுள்ள சமையல் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சமையல் என்பது முழு மனதுடன் செய்யக்கூடிய ஒரு அருமையான கலை. எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் கூட சில சமயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு உணவின் சுவை இருக்காது. ஆனால், சில நுணுக்கங்களை மட்டும் அறிந்தால் போதும் உங்கள் சமையலை மிகவும் சிறப்பாக்கி விடும். அந்த வகையில், இன்றைய கட்டுரையில் உங்களுக்காக சில பயனுள்ள சமையல் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் சமையலை சுவையாக மாற்ற முடியும். அவை..
இதையும் படிங்க: காய்கறிகள் வாங்க போறீங்களா?! அப்போ இப்படி பாத்து வாங்குங்க.. தரமானத வாங்கலாம்!
பயனுள்ள சமையல் குறிப்புகள்:
- டீ போடும்போது எலுமிச்சை பழம் அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை சிறிதளவு அதில் சீவி போட்டால், மணமாகவும், குடிப்பதற்கும் ருசியாகவும் இருக்கும்.
- குருமா செய்யும் போது பிற மசாலா பொருட்களுடன் தக்காளி மற்றும் சிறிதளவு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து அவற்றை குருமாவில் சேர்த்தால் குருமா சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
- அதுபோல கொத்தமல்லி புதினா துவையலாரும் செய்யும்போது அதில் தண்ணீருக்கு பதிலாக சிறிதளவு தயிர் சேர்த்து அரைத்தால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் மற்றும் கூடுதல் நிறத்தையும் கொடுக்கும்.
- வாழைத்தண்டு, வாழைப்பூ, கத்தரிக்காய் ஆகியவற்றை நறுக்கியது உடனே தண்ணீரில் போட்டு அதில் சிறிதளவு மோரையும் கலந்து விடுங்கள். அவை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
- இடியாப்பத்திற்கு மாவு பிசையும் போது அதில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மணமாக இருக்கும்.
- பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
- மொச்சை, தட்டைப் பயிறு ஊற வைக்க மறந்து விட்டால் அவற்றை நீங்கள் ஒரு கடாயில் போட்டு சிறிது நேரம் வந்து பிறகு வேக வைத்தால் விரைவில் வெந்துவிடும்.
- வாழைக்காய் பஜ்ஜி உப்பலாக வர அதில் பேக்கிங் சோடாவிற்கு பதிலாக ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து நன்கு கலந்து பிறகு பஜ்ஜி சுட்டால் உப்பலாக வரும் மற்றும் ருசியாகவும் இருக்கும்.
- மிளகாய் பஜ்ஜி செய்யும் போது மிளகாயில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு பிறகு அதை சூடான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட்டு பிறகு பஜ்ஜி சுட்டால், அதில் காரம் இருக்காது.
- நீங்கள் எந்த ஒரு இனிப்பு பண்டத்தையும் செய்யும் போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
- தேங்காய் துருவல் மீதி இருந்தால் அதை ஒரு கடாயில் சிறிதளவு உப்புடன் சேர்த்து வதக்கினால் மறுநாள் பயன்படுத்தலாம்.
- தோசை சுடுவதற்கு முன்பு மாவில் சிறிதளவு சீரகத்தை கையால் நசுக்கி மாவை கலந்து பிறகு தோசை சுட்டால் மணமாக இருக்கும்.
- ரவை தோசை சுடும் மாவில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து பிறகு தோசை சுட்டால் தோசை நல்ல சிவந்து மொறுமொறுப்பாக இருக்கும்.
- வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும் மாவு இறுக்கமாகி விடும்.
- மிளகாய் வறுக்கும்போது முடி ஏற்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
- காய்கறிகளை அதிகளவு தண்ணீரில் வேக வைக்காதீர்கள். இல்லையெனில், வைட்டமின் சத்துக்கள் போய்விடும்.
இதையும் படிங்க: Kitchen Tips : இல்லத்தரசிகளே அவசியம் இந்த 7 கிச்சன் டிப்ஸ தெரிஞ்சு வச்சுக்கோங்க..