10 நிமிடங்கள் போதும்.. கைகளில் கறை படியாமல் வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்யலாம்!!
Valaipoo CleaningTips : வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பூவை கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும். அது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. வாரம் ஒரு முறை வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் இரத்த சோக பிரச்சனை விரைவில் குணமாகும். உங்களுக்கு தெரியுமா வாளை பூவே பொறியலாக செய்து சாப்பிட்டால் நீரிழிவு பிரச்சினைகளுக்கு ரொம்பவே நல்லதாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலர் வாழைப்பூவை உணவில் சேர்ப்பதில்லை. காரணம் இதை ஆய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் மற்றும் சிரமமாகவும் இருக்கும் என்பதால் தான், இந்தகாலத்து பெண்கள் பலரும் வாழைப்பூவை வாங்கி சமைப்பதில்லை.
சொல்லப்போனால், இன்னும் நிறைய பேருக்கு வாழைப்பூவை எப்படி அறிய வேண்டும் என்று கூட தெரியாது. அதுமட்டுமின்றி, வாழைப்பூவை அரிந்தால் கைகளில் கறை படிந்து விடும். இதனால் பல பெண்கள் அதை வாங்க விரும்புவதில்லை. அதனால் இந்த கட்டுரையில், கைகளில் கறை ஏதும் படியாமல் வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸிக்கு சத்தான வாழைப்பூ வடை.. ரெசிபி இதோ!
வாழைப்பூவை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
மோர் - 2 ஸ்பூன்
எண்ணெய் அல்லது உப்பு - தேவையான அளவு (கைகளில் தடவ)
இதையும் படிங்க: ஆரோக்கியத்தின் வரப் பிரசாதம் வாழைப்பூ பொரியல்!
வாழைப்பூ சுத்தம் செய்யும் முறை:
நாளை வாழைப்பூவை சுத்தம் செய்ய முதலில் உங்கள் கைகளில் என்னை அல்லது உப்பை நன்கு தடவிக் கொள்ளுங்கள். பிறகு, வாழைப்பூவை எடுத்து அதன் ஒவ்வொரு இதழையும் தனித்தனியாக பிரித்து எடுக்கவும். பிறகு வாழைப்பூவை மெல்லமாக எடுத்து அதன் முனையினை கையால் தீட்டினால் பூக்கள் மலரும். பூக்கள் ஒவ்வொன்றிலும் நரம்பு இருப்பதால், அதை எடுத்து விடுவது நல்லது. ஏனென்றால், அதை வேக வைத்தாலும் வேகாது சாப்பிட்டாலும் வயிற்றுக்கு நல்லதல்ல. மேலும், இந்த நரம்பை நீங்கள் வாழைப்பூ வெள்ளை கலர் வரும் வரை தான் எடுக்கவும். வாழைப்பூவின் நுனிப்பகுதியில் நரம்புகள் இருப்பதில்லை. எனவே, அதை எடுக்க தேவையில்லை. அதுபோல அதன் அருகில் ரப்பர் போன்ற மற்றொரு இதழ் இருக்கும் அவற்றையும் நீக்கி விடுங்கள். அவ்வளவுதான் இப்போது வாழைப்பூவை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது அரிந்த வாழைப்பூவை மோர் கலந்து நீரில் போட்டு நன்றாக கழுவுங்கள். பிறகு அதை சமைக்கவும்.
முக்கிய குறிப்பு:
- நீங்கள் உங்கள் கையில் வாழைப்பூவை அரிவதற்கு முன் எண்ணெய் அல்லது உப்பை தடவினால் உங்களது கைகளில் கறை பிடிக்காது.
- அதுபோல மோர் கலந்த நீரில் அறிந்த வாழைப்பூவை போட்டால் வாழைப்பூ கறுகாது மற்றும் சமைக்கும்போது பிரெஷாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, பொரியல் செய்யும்போது பார்ப்பதற்கு நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D