21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாட்டு மக்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. 700 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 35 பேருக்கும் மேலாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மற்றவர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிகிச்சை பெற ஏதுவாக இன்று கூடுதலாக 530 மருத்துவர்களும்,1000 செவிலியர்களும் தகுதியின் அடிப்படையில் உடனடியாக பணியில் அமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது ஒரு பக்கம் இருக்க சிஆர்பிஎப் வீரர்களும் அவர்களது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா பாதித்தவர்களுக்காக ப்ரைம் மினிஸ்டர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளனர். அதன் மதிப்பு 33 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரானா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது

அதன் படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது